காரைக்கால், அக். 31:
தருமபுரம் ஆதீனத்தின் 26-வது சன்னிதானம் சுவாமிகளின் மணி விழா மாநாட்டையொட்டி, காரைக்காலில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்றான திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அவர்களின் 60-வது மணி விழா நவம்பர் 10ஆம் தேதி மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் மடத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் புது டெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அமைச்சர்கள், புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், புதுச்சேரி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனை முன்னிட்டு, திருநள்ளாறு கட்டளை மடம் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் அவர்கள், 60-வது மணி விழா மாநாட்டின் அழைப்பிதழை சட்டமன்ற உறுப்பினர் ஜி. என். எஸ். ராஜசேகரன் எம்.எல்.ஏ. அவர்களுக்கு நேற்று முன்தினம் வழங்கினர்.

