இன்று (21.10.25) திருநள்ளாறு கொம்யூன் தென்னங்குடி, முப்பைத்தங்குடி, பண்டாரவடை ,சேத்தூர், மாதூர் ஆகிய வழிகளுக்கான முக்கிய வடிகால் செட்டிக்கோட்டகம் சிற்றேறி அருகில் மதில்சுவர் இடிந்து விழுந்து தண்ணீர் வெளியேறாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் அவதிக்கு உள்ளாகினர் இந்த நிலையில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு.G.N.S.ராஜசேகரன் நேரில் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் சரி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் இளநிலை பொறியாளர் திரு.ராஜகணபதி , திரு.தங்கவேல், விவசாயி சங்க பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் உடன் இருந்தனர்














